கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின!!
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட், கோவில்வயல் , இயக்கச்சி, முகாவில், சோரன்பற்று, தர்மகேணி, புலோப்பளை, தம்பகாமம், பளை, அல்லிப்பளை, கச்சார்வேலி, அரசங்கேணி, இத்தாவில், முகமாலை மற்றும்,வேம்பொடுகேணி கிராமங்களைச் சேர்ந்த 190 குடும்பத்தை சேர்ந்த 597 பேர் பாதிப்படைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
மேலும் பாதிப்புக்குள்ளான இடங்களை இன்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடு படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .




