Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் பலி!!!

(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி கன்னியா பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (14) 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஹோட்டல் ஒன்றில் வேலை ஆற்றி வருகின்ற ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதினால் விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை கன்னியா பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் 37 வயது எனவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வீதியில் இம்மாதம் மாத்திரம் 20க்கும் மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் மூவர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகளவில் மது போதையில் வாகனம் செலுத்துவதினாலேயே விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
Powered by Blogger.