காத்தான்குடியில் சிறுவன் மீது மது போதையில் கொடூரத் தாக்குதல்!
காத்தான்குடி 5ம் குறிச்சி அப்துல் மஜீத் ஆலிம் லேனில் வசித்து வரும் ஒன்பதாம் தரம் கல்விகற்கும் றுசைப் அஹமட் வயது (14) சிறுவன் தற்போது தாக்குதலுக்கு இலக்காகி ஆரையம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு சிறுவனின் தந்தையின் சகோதரர் நூறு முகம்மது சுபைர் என்பவறால் மது போதையில் கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாக்குதலுக்கு இலக்காகிய குறித்த சிறுவன் மீது இதற்கு முன்பும் பல தடவைகள் தாக்குதல் மேற்கொள்வதற்கு முயற்சித்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியின் கிராமசேவகர், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள பிரதிகளே இங்கு காண்கின்றீர்கள்.
இச்சிறுவன் மீதான தாக்குதலை எமது இணையத்தள ஊடகம் வன்மையாக கண்டிப்பதுடன், தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை எமது இணையத்தளம் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்கு இலக்காகிய சிறுவனுக்கு நீதி கிடைக்கும் வரை அனைவரும் share பண்ணவும்.
(தகவல் குடும்பத்தினர்)

