Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றினை இல்லாதொழிக்க விஞ்ஞான ரீதியான நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும் : அனில் ஜாசிங்க

நாட்டிலிருந்து கொரோனா தொற்றினை முழுமையாக இல்லாதொழிக்க விஞ்ஞான ரீதியான நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும் என முன்னாள் சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


அதை விடுத்து புராண நம்பிக்கைகளுக்கு பின்னால் செல்வதை விடுத்து விஞ்ஞான நடைமுறைளை பின்பற்ற முன்வர வேண்டும் என அவர் கோரியுள்ளார்.


தற்போதைய சூழ்நிலையிவ் நாட்டில் பலர் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புராண நம்பிக்கைகளுக்கு முக்கியத்துமளிப்பதாக அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


பல அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புக்கள் இருந்த போதிலும் மக்களின் இந்த நடவடிக்கை கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.