திருகோணமலையில் மாரடைப்பால் மரணமடைந்த நபருக்கு Covid -19 தொற்று இல்லை : ஜனாஸா இன்று நல்லடக்கம்!!!

(ஏ.எல்.றபாய்தீன்பாபு)
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை - புடவைக்கட்டில் கடலுக்குச் சென்ற ஜமாலியாவைச் சேர்ந்த முஸ்தபா பெளஷர் வயது 50 இரண்டு குழந்தைகளின் தந்தை கடலில் வைத்தே மாரடைப்பில் அவஸ்த்தைப்பட்டார் கடற்படையினரின் துணையுடன் புல்மோட்டை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுகையில் இவர் காலமானார்.
இவரது ஜனாசா திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் PCR பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் போது அவருக்கு தொற்று இல்லையென உறுதிப்படுத்திய பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை (19) ஜனாஸா உறவினர்களிடம் கையழிக்கப்பட்டு ஜமாலியா முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது