திருகோணமலை மட்டிக்களியில் அமைந்திருந்த மீன் கடைகள் அகற்றம் : அவ்விடத்தில் பூந்தோட்டம் அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் !!!

(திருகோணமலை - நிருபர்)
திருகோணமலை கண்டி பிரதான வீதியின் மட்டிக்களி வீதியோரத்தில் அமைந்திருந்த மீன்கடைகள் அகற்றப்பட்டு அவ் இடத்தில் பூந்தோட்டம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை நகராட்சி மன்றத்தின் செயலாளர் லே.விஷ்னு அவர்கள் தெரிவித்தார்.
நீண்டகாலமாக அவ்விடத்தில் மீன் வியாபாரங்கள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று அதற்கான மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் பூங்கா அமைக்கும் வேலைத்திட்டமும் செயலாளர் அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அப்பிரதேச மக்களால் நகரசபைக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.