Header Ads

Breaking News
recent

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 811 பேர் குணமடைவு !!!


நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 811 பேர் குணமடைந்து, சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின், நாளாந்த கொரோனா நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 75,110 ஆக உயர்வடைந்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 4,444 ஆக குறைவடைந்துள்ளது.

79,999 பேருக்கு நேற்றைய நாள் வரையில், கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.