மஹியங்கனையில் இரு ஆடை தொழிற்சாலைகளில் 75 பேருக்கு கொரோனா..!
மஹியங்கனையில் இரண்டு ஆடை தொழிற்சாலைகளைச் சேர்ந்த 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஹியாங்கனையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் 324 பேருக்கு கடந்த 29ஆம் திகதி PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றின் முடிவுகள் நேற்று 2ஆம் திகதி கிடைக்கப் பெற்றுள்ளன.
அதன்படி 34 பேர் கொரோனா நோய்த் தொற்றுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே 31 பேர் நோய்த் தொற்றுடையவர்கள் என இனம் காணப்பட்டிருந்தனர்.
இது தவிர மற்றொரு ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 10 பேர் ஏற்றகனவே இனம் காணப்பட்டிருந்த நிலையில், இரண்டுதொழிற்சாலையிலும் மொத்த தொற்றாளர்கள் 75 பேர் உள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுமார் 2,500 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் ஆடை தொழிற்சாலைகளில் சுகாதார விதிமுறைகளின்படி நிறுவனங்களை தனிமைப்படுத்தவும் தொற்று நீக்கம் செய்யவும் பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
