Header Ads

Breaking News
recent

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் இடம் பெற்ற விபத்து!!


மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் இன்று புதன் கிழமை (3) காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளராக கடைமையாற்றும் அடம்பன் பகுதியை சேர்ந்த ரி.எம்.சல்மான் (வயது-29) என்பவர் உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து அடம்பன் சந்தியில் இடம் பெற்றுள்ளது.

உயிலங்குளம் பள்ளமடு பிரதான வீதியூடாக வந்த கனரக வாகனவும், அடம்பனில் இருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிலும் மேதியே விபத்திற்கு உள்ளாகியது.

இதன் போது படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
Powered by Blogger.