890 ரூபாய்க்கு விதை உளுந்து கொள்வனவு!!!
விதை தேவைக்காக சுத்திகரிக்கப்பட்ட உளுந்து கிலோ 890 ரூபாய்க்கு கொள்வனசெய்யப்படும் என வவுனியா விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி வீதியில் அமைந்துள்ள விவசாயத் திணைக்களத்தில் விதை உற்பத்தி திட்டத்திற்கும் சாதாரண தேவைக்குமாக விதை உளுந்தினை கொள்வனவு செய்த விவசாயிகளிடம் இருந்தே குறித்த உழுந்து மீண்டும் கொள்வனவு செய்யப்படும்.
அந்தவகையில் விதைத்தேவைக்காக சுத்திகரிக்கப்பட்ட ஒரு கிலோ உளுந்தினை 830 ரூபாய் தொடக்கம் 890ரூபாய் வரை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது கொள்வனவு பற்றுசீட்டுடன் பிரதி விவசாய பணிப்பாளர் (விதைகள் பிரிவு) அவர்களை தொடர்பு கொண்டு ஏனைய விடயங்களை அறிந்துகொள்ளலாம்.
இது தொடர்பான மேலதிக தொடர்புகளுக்கு: 0242222273, 0776321713 குறித்த இலக்கங்களிற்கு அழைப்பினை ஏற்ப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
