Header Ads

Breaking News
recent

மூன்றாம் நாள் போராட்டத்தில் திருகோணமலையில் தாக்குதல்!


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று மூன்றாவது நாளாக திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போதே திருகோணமலை – மடத்தடிச் சந்திப்பகுதியில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பேரணியில் பொலிஸார் கலந்துகொண்டிருந்தபோதும் தாக்குத்தல் நடத்தப்பட்டுள்ளதுடன், இத் தாக்குதலில் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.