கொழும்பு – புத்தளம் ஏ3 பிரதான வீதி தற்காலிகமாக மூட தீர்மானம்!!!

கொழும்பு – புத்தளம் ஏ3 பிரதான வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 36 மணித்தியாலங்களுக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது.
நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில் உள்ள புகையிரதக் கடவையில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக குறித்த வீதி இவ்வாறு மூடப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 6 ஆம் திகதி காலை 6 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரையிலான 36 மணித்தியாலங்களுக்கு கொழும்பு – புத்தளம் ஏ-3 பிரதான வீதி மூடப்படவுள்ளது.
இந்த நிலையில், குறித்த வீதியினூடாக பயணிக்கும் வாகனங்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம், சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.