Header Ads

Breaking News
recent

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம் : திருமலையில்!!!!


(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (20) 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் தம்பலகாமம் -ஈச்ச நகர் பகுதியைச் சேர்ந்த எம். உசன் இஸ்ஸத்கான் (38 வயது) மற்றும் முள்ளிப்பொத்தானை- யூனிட் 07யைச்சேர்ந்த எம். எஸ். எம்.ரிஷான் (30வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-திருகோணமலை நகர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் தொழில் புரிந்து வரும் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது தம்பலகாமம் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த இருவரையும் 19 90 அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலமாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் இவர்கள் இருவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.