கிழக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு வட்டியில்லாக் கடன்!!!!

மட்டக்களப்பு தேவநாயகம் கூட்டுறவு கலையரங்கில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி அவர்களின் தலைமையில் நேற்று (20) இடம்பெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக வர்த்தக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன, கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவன்ன அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்
சிறப்பு அகதிகளாக இராஜாங்க அமைச்சர் கௌரவ வியாழேந்திரன் பா. உ, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர் கௌரவ சந்திரகாந்தன் பா. உ., கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திருமதி. கலாமதி பதமராஜா அவர்களும் கலந்து கொண்டனர்
இவர்களுடன் கொழும்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் பொது முகாமையாளர்கள் உட்பட தேசிய கூட்டுறவு சபை தலைவர், தேசிய கிராமிய வங்கிகளின் சமாசத்தின் தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்
நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 12 கூட்டுறவு சங்கங்களுக்கு நெல் கொள்வனவுக்கான காசோலைகள் வழங்கப்பட்டதுடன்
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஆகியோரினால் அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

