கொரோனா விதிமுறையை மீறியதால் லண்டன் வாழ் தமிழ் குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை!!
இங்கிலாந்து, லண்டன் நெடுஞ்சாலையான ஏ- 3ல் , கிங்ஸ்டன் நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு காரில் 04பேராக சென்ற தமிழ் குடும்பம் ஒன்றை மறித்த லண்டன் மெற்ரோ பொலிடன் பொலிசார் அவர்களுக்கு 200 பவுண்ஸ் அபராதம் விதித்ததாக கூறப்படுகின்றது
அவர்கள் தமது உறவினர்களை பார்க்க சென்றவேளையே இவ்வாறு பொலிஸாரால் வழி மறிக்கப்பட்டுள்ளார்கள். இதன்போது பொலிசார் வினவியபோது சரியான காரணத்தை கூற முடியாமல் திணறியதுடன், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் காரில் இருந்துள்ளார்கள்.
இதனை திடர்ந்து லாக் டவுன் சட்டத்தை மீறியமைக்காகவும், அனாவசியமாக வெளியே சென்ற குற்றத்திற்காகவும், அவர்களுக்கு 200 பவுண்டுகள் தண்டப் பணத்தை பொலிசார் அறவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
