Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் இறுதிக் கிரியை தொடர்பில் ஆராயும் குழு வெளியிட்ட தகவல்!!!


கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்கு தமது குழு அனுமதி வழங்கியதாக கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் இறுதி கிரியைகளை நடத்தும் விதம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் ஜெனிஃபர் பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரபல சிங்கள தொலைக்காட்சியான ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு விசேட பரிந்துரைகளின் அடிப்படையில் அனுமதி வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றில் உயிரிழப்போரின் இறுதி கிரியைகளை நடத்தும் விதம் குறித்து ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சின் செயலாளர் S.H.முணசிங்கவினால், கடந்த டிசம்பர் மாதம் விசேட புத்திஜீவிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்த குழுவின் அறிக்கை உரிய தரப்பிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.