Header Ads

Breaking News
recent

போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அழைப்பு!!!



எஸ்.எம்.எம்.முர்ஷித்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமுகமாக நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகும் இரண்டாம் நாள் போராட்டத்திற்கு அனைத்து முஸ்லிம்களும் தங்களது ஆதரவுகளை வழங்க வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அழைப்பு விடுத்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு முஸ்லீம் சமூகமும் ஆதரவு வழங்க வேண்டுமென விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், நில அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனத்திற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமலாக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப்பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றைக்கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கோட்டும் இப்போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெறுகின்றது.

எனவே, இதற்கு எமது மக்கள் குறிப்பாக, இளைஞர்கள் இதில் கலந்து கொள்ள வேண்டும்.

நாளை (4) மட்டக்களப்பு தாளங்குடாவிலிருந்து ஆரம்பமாகும் இப்பேரணி காத்தான்கடி, ஏறாவூர், ஒட்டமாவடி பிரதேசத்தினால் வருகை தரும் போது, முஸ்லீம்களும் தங்களது ஆதரவினைத் தெரிவிக்க வேண்டுமென்றும், இது சிறுபான்மைச் சமூகத்திற்கான உரிமைக்கான போராட்டம். அனைவரும் இனவொற்றுமையுடன் செயற்பட வேண்டுமென்றும் தெரிவிததுள்ளார்.
Powered by Blogger.