Header Ads

Breaking News
recent

நாட்டு மக்கள் அனைவருக்கும் அடக்கு முறைகளற்ற உண்மையான சுதந்திரம் கிடைக்க வேண்டும் - சிலோன் மீடியா போரம் வாழ்த்து.


(எஸ்.அஷ்ரப்கான்)

இலங்கையின் 73வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நாட்டு மக்கள் அனைவருக்குமான எதிர்காலம் அடக்கு முறைகளற்ற உண்மையான சுதந்திரம் கிடைக்க வேண்டுமென்று சிலோன் மீடியா போரம் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழ்ப்பேசும் சமூகங்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளுடனான சவால்கள் நீங்கி எமது தாய் நாடு என்ற அடிப்படையில் சுபீட்சமான வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

இலங்கையின் இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மைகள் பல்வேறு கஸ்டங்களை தமது மத, கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் இருப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு கோணங்களில் வீதிக்கிறங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்பட்டுள்ளமை கவலையளிக்கிறது.

ஆனால், இவற்றுக்கு முழுக்காரணம் ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்களே தவிர, எமது தாய் நாடல்ல. நாம் எல்லோரும் இலங்கை தாயின் மக்கள் என்ற அடிப்படையில் நாட்டை நேசிக்கின்றவர்களாக மாற வேண்டும். ஆட்சியாளர்களின் அரசியல் இருப்பிற்காகச் செயற்படுகின்ற இந்த அறியாயங்கள் நீங்கி, முழு சுபீட்சமுள்ள நாடாக எமது தாய்த்திருநாடு மாற பிரார்த்திப்போமாக.

நாட்டை நேசிக்கின்றவர்களாக அனைவரும் தமிழ்ப்பேசும் மக்கள் அனைவரும் மாற வேண்டும். எமது பிரச்சினைகளை முன்னிறுத்தி நாட்டை நேசிக்காதவர்களாக நாம் மாறக்கூடாது. தேசிய தினத்தைச் சிறப்பாக அனுஸ்டித்து நாமும் தேசிய இனமே என்பதை தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் தமிழ் பேசும் சமூகங்கள் காட்ட முனைவோமென்றும் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.