திருமலையில் லிங்க நகர் பகுதியில் கணவன் தாக்கியதில் மனைவி பலி!!!!

திருகோணமலை - லிங்கநகர் பகுதியில் கணவரின் தாக்குதலில் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
55 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி 11:52 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் குறித்த பெண் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்.
உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த கே.பரமேஸ்வரி (55 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.