Header Ads

Breaking News
recent

அனுராதபுர மாவட்டத்தின் மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் ஒன்றுகூடல்!!!



(அலுவலக செய்தியாளர் - நசீம்)
அனுராதாபுர மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் ஒன்றுகூடல் இன்று (21) ஹொரோவப்பொத்தானை டவுன் மன்பஉல் ஹஸனாத் ஜும்மா பள்ளிவாசலில் பள்ளிவாயலின் தலைவர் அல் ஹாஜ் சியாம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில்....

அப்துற்றஹ்மான் நளீமியின் வரவேற்புரையை தொடர்ந்து அல் ஹாஜ் சியாம் அவர்கள் தலைமை உரை நிகத்தினார்.

தொடர்ந்தும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் நிம்ஷாத் ஒன்றுகூடலின் முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்தினார்.

அஹதிய்யா பாடசாலைகளை மஸ்ஜித்களில் ஆரம்பித்தல், பதிவு செய்யப்படாத மஸ்ஜித் நிருவாகிகளை பதிவு செய்தல்,பதிவு செய்யப்படாத பள்ளிவாயல்களை பதிவு செய்து கொள்ளல் போன்ற விடயங்களை மேலும் அவர் தெளிவு படுத்தினார்.


குறித்த இந்நிகழ்வில் அனுராதபுர மாவட்ட சம்மேளன உறுப்பினர்கள், ஹொரோவப்பொத்தானை ஜம்மிய்யதுல் உலமாவின் உறுப்பினர்கள் மற்றும் ஹொரோவப்பொத்தானை, கெப்பித்திகொல்லாவ பிரதேச நிருவாகிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.
Powered by Blogger.