கொரோனாவால் மரணித்தவர்களை அடக்கம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல் நாளை இடம்பெறவுள்ளது!
கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்யும் வகையிலான வர்த்தமானி நேற்றிரவு சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சியினால் வெளியிடப்பட்டது
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்கான புதிய நடைமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவிக்கின்றார்.
சுகாதார அதிகாரிகளுக்கு இடையில் நாளைய தினம் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இந்த விடயம் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
