Header Ads

Breaking News
recent

இலங்கை எதிர்த்தாலும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்!!!!



இலங்கையின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப் இதனைத் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கை, இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சீராக்கப்பட்டு நேற்று முன்வைக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் சில விடயங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமையால், இந்த அறிக்கையை இறுதிப்படுத்த 3 வாரங்கள் காலம் தாழ்ந்திருந்தது.

இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில பொறிமுறைகளின் பல விடயங்களை அமுலாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சிரியா, மியான்மார் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்டுள்ளதைப் போன்றோ அல்லது இலங்கை விடயத்தை பிரத்தியேகமான முறையிலோ கையாள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மனித உரிமைகள் பேரவையே தீர்மானிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.