Header Ads

Breaking News
recent

இரண்டு யுவதிகளுடன் அறிமுகத்தை ஏற்படுத்தி மயக்க மருந்து கொடுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த இளைஞன்!


இரண்டு யுவதிகளுடன் அறிமுகத்தை ஏற்படுத்தி, அவர்களிற்கு மயக்க மருந்து கொடுத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்ட இளைஞனை கைது செய்ய பொலிசார் விசாரணைணை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரத்திலிருந்து கொழும்பு செல்லும் பேருந்தில் பயணித்த இரண்டு யுவதிகளுடன், தன்னை பழக்கப்படுத்திக் கொண்ட இளைஞன் ஒருவன், அவர்களிற்கு உண்பதற்காக சிற்றுண்டியொன்றை வழங்கியுள்ளார்.

மயக்க மருந்து கலக்கப்பட்ட அந்த உணவை உட்கொண்ட யுவதிகள் மயக்கமடைந்துள்ளனர்.

இதையடுத்து, அவர்களிடமிருந்த 200,000 ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுக் கொண்டு இளைஞன் தலைமறைவாகி விட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
Powered by Blogger.