Header Ads

Breaking News
recent

குறைந்த விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் சாம்சங் நிறுவனம்!


சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போனின் குறைந்த விலை எடிஷன் ஆகும்.

புதிய கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் ல் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர், கொண்டிருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 3 ஜிபி ரேம், 13எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்02 சிறப்பம்சங்கள்

– 6.5 இன்ச் 1560×720 பிக்சல் HD+ LCD இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739W பிராசஸர்
– PowerVR Rogue GE8100 GPU
– 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யுஐ
– டூயல் சிம்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.9
– 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
– 5 எம்பி செல்பி கேமரா, f/2.0
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– மைக்ரோ யுஎஸ்பி
– 5,000 எம்ஏஹெச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன் புளூ, ரெட், கிரே மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், அமேசானில் இது ரூ. 6,799 எனும் அறிமுக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை பிப்ரவரி 9 ஆம் தேதி துவங்குகிறது.
Powered by Blogger.