யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்து!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஏ9 வீதியில் விபத்து சம்பவம் பதிவாகி உள்ளது.
காலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து அதிகாலை 3:30 மணியலவில் பதிவாகியுள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்து வீதி அருகில் உள்ள தனியார் காணி ஊடாக பயணித்துள்ளது. எனினும் அவ் விபத்தின்போது பயணித்த பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


