Header Ads

Breaking News
recent

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடியில் வளவொன்றினுள் மனிதத்தலை வீசப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்தனர் .


குறித்த தலையானது மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்திலிருந்து திருகி எடுக்கப்பட்டடதாக பொலிஸாரின் முதலகட்ட விசாரணையின் போது கண்டறியப்பட்டுள்ளது.
தலை வீசப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளரை பயமுறுத்தவே மனிதத் தலையை மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தில் இருந்து திருகி எடுத்து வீசியதாக சந்தேக நபர ஒத்துக் கொண்டுள்ளனர்.

வியாழக்கிழமை(25) மாலை குறித்த வீட்டு உரிமையாளரின் முன்னால் அமைந்துள்ள வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் குறித்த வீட்டு உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் கொலையச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த மனிததலை களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாகவும் தோண்டி எடுக்கப்பட்ட தலை அதே பகுதியினைச் சேர்ந்த 83 வயதுடைய கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட பெண்னொருவருடைய தலையென இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Powered by Blogger.