Header Ads

Breaking News
recent

மதுபானம், சிகரட் பாவனையாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படுமா?


மதுபானம் மற்றும் சிகரட் பாவனையாளர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகின்றமையினால், அவ்வாறனவர்களுக்கு கொவிட்ட தடுப்பூசி வழங்குவதை தவிர்க்குமாறு சிகரட் மற்றும் மதுசார தொடர்பிலான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

மதுபானம் மற்றும் சிகரட் பாவனையாளர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை விடவும், சிகரட் மற்றும் மதுபானம் பயன்படுத்தாதவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவது நியாயமானது எனவும் அவர் கூறுகின்றார்.

அவ்வாறு மதுபானம் மற்றும் சிகரட் பாவனையாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றால், அவர்கள் தடுப்பூசி வழங்கப்பட்ட தினத்திலிருந்து குறைந்தது 6 மாதங்களாவது அவற்றை பயன்படுத்தாது இருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.