Header Ads

Breaking News
recent

100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட Facebook களியாட்டம் - மூவர் கைது



மாத்தறை, மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்டம் ஒன்றை சுற்றிவளைத்த சந்தர்பத்தில் வௌிநாட்டு மதுபானம் 57,250 லீற்றருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த களியாட்ட நிகழ்வில் சுமார் நூறுக்கு அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.