Header Ads

Breaking News
recent

போலி 5,000 ரூபா பெறுமதியான 20 நோட்டுகள் வைத்திருந்த நபர் கைது!!!



மட்டக்களப்பு - ஓட்டமாவடியில் பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் 5,000 ரூபா பெறுமதியான 20 நோட்டுக்களை வைத்திருந்த ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதுடன் நோட்டுக்களையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றைடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட அதிரடிப்படையினர் குறித்த பாதணி விற்பனை நிலையம் ஒன்றைச் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த விற்பனை நிலையத்தில் பணி புரியும் ஒருவரிடமிருந்து 5,000 ரூபா கொண்ட 2,20,000 பெறுமதியான போலி நோட்டுக்களைக் கைப்பற்றியதுடன் சந்தேக நபரைக் கைது செய்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேக நபரை வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Powered by Blogger.