உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் மற்றுமொரு நபர் கைது !!!

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் நபர் ஒருவர், வெலிகமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
27 இலட்சம் ரூபா பணத்துடன் இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
மாவனெல்லை, கிரிகந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான ஒரு நபரே கைது செய்யப்பட்டு;ள்ளார் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 44 வயதான நபர் ஒருவர், தீவிரவாத பிரச்சாரங்களை செய்த குற்றச்சாட்டில் மாவனெல்லையில் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.