Header Ads

Breaking News
recent

நல்லடக்கம் செய்வதற்காக, இதுவரை 6 இடங்கள் அரசு அடையாளம் கண்டுள்ளது!!!



கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின், உடல்களை நல்லடக்கம் செய்வதற்காக, இதுவரை 6 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

1, கிண்ணியா

2, ஓட்டமாவடி

3, சம்மாந்துறை

4, இறக்காமம்

5, மரிச்சுக்கட்டி

6, புளிச்சாக்குளம்

ஆகிய பகுதிகளே இவையாகும்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, பிரதமர் மகிந்தவிடம் கையளித்த சில பிரதேசங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

எனினும் இந்த பிரதேசங்களில் நிடித்தடி நீர் மட்டம் குறைவானது என உறுதி செய்யப்பட்ட பின்னர், நிபுணர் குழுவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் இணைந்து, இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வார்கள் எனவும், அவ்வாறு மேற்கொள்ளப்படும் தீர்மானம் அடுத்தவாரம் அறிவிக்கப்படுமெனவும் மேலும் அறிய வருகிறது.

மேலும் சில பகுதிகள் அடையாளம் காணப்பட்ட போதிலும், சில கடும்போக்கு சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பதை கவனத்திற் கொண்டு, அப்பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.