Header Ads

Breaking News
recent

கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின், உடல்களை அடக்கம் செய்வதற்கான நிபந்தனைகள்!!!!



1. இறந்தவரை கழுவி சுத்தம் செய்யக் கூடாது.

2. கருப்பு துணியால் கபனிட வேண்டும்.

3. நீர் கசியாவண்ணம் 3 mm பாலிதீன் உறையுள் இட்டு 26 செல்சியஸ் வெப்ப சீலரால் முழுமையாக சீலிடப்படல் அவசியம்.

4 . கழுவவில்லை என்பதற்கு மோட்சுவரி நிர்வாகி , கபன் துணி சாயம் போகாத கரும் கருப்பு என்பதற்கு பெக்டரி முகாமையாளர் , 3 mm பொலிதீனுக்கு அதன் தயாரிப்பாளர் , 26 செல்சியஸ் அளவில்தான் சீல் வைக்கப்பட்டது என்பதற்கு அரசாங்க நிர்வாகி

ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்ட தனி தனி கடிதங்கள் தலா 100 ரூபா முத்திரையில் உறவினர் அல்லாத 18 வயதிற்கு மேற்பட்ட , சிறை சென்றில்லாத அல்லது அபராத பணம் ( மோட்டார் சாரதி குற்றங்கள் உட்பட ) எதுவும் போலீசில் செலுத்தியிராத இருவர் சாட்சிகளாக கையொப்பமிட்டிருக்க வேண்டும்.

சாட்சிகளின் நன்னடத்தை சான்றிதழ் ( 24 மணித்தியாலங்கள் கடவாதவை ஆக இருத்தல் அவசியம் )

5. மேற்குறித்த ஆவணங்கள் அனைத்தும் கிராம சேவகர் , பகுதி போலிஸ் ஓ.ஐ.சி, தலைமை வைத்திய அதிகாரி , பிராந்திய சுகாதார அதிகாரி , மாவட்ட சுகாதார நிர்வாகி , தேசிய சுகாதார பணிப்பாளர் , ஆகியோரால் உறுதிப் படுத்தப்படல் அவசியம்.

6 . அடக்கத்திற்கென தெரிவு செய்யப்பட்ட இடம் - மனித நடமாற்றம் அற்றது ( 6 KM குறைந்த தூரத்துள் ) 200 M ஆழம்வரை ஈரப்பசை அற்றது , தனியாருக்கு சொந்தமில்லாதது , 10 KM தூரத்திற்குள் வாவிகள் , குளங்கள் , நதிகள் , ஓடைகள் , கிணறுகள் அற்றது , 18 KM தூரத்திற்குள் விவசாய நிலங்கள் இல்லாதது என்பவை அரசாங்க அதிபர் , மாவட்ட புவியியல் ஆய்வு நிலைய பொறுப்பதிகாரி என்போரால் உறுதி செய்யப்பட்ட ஆவணம் சுகாதார அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு அவரின் செயலாளருக்கு , மரணம் நிகழ்ந்து 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்குமாறு 3 பிரதிகளுடன் பதிவுத்தபாலில் அனுப்பப்படல் வேண்டும். ( நேரடியாக பெறப்பட மாட்டாது )
Powered by Blogger.