Header Ads

Breaking News
recent

90 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் மீட்பு


சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 50 இலட்சத்திற்கு அதிகமான சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் ஒன்று கிராண்ட்பாஸ் சுங்க தரிப்பிடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்கலன் சுங்க பணிப்பாளர் விஜித ரவிப்ரிய முன்னிலையில் திறக்கப்பட்டதுடன், அதன் பெறுமதி 90 இலட்சம் ரூபா என சுங்கவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அந்த சிகரெட்டுகள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இரும்பு குழாய்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 8000 சிகரெட் அட்டைப்பெட்டிகள் இதில் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சிகரெட்டுகளை இறக்குமதி செய்த நபர் சுங்கத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Powered by Blogger.