Header Ads

Breaking News
recent

ஹட்டனில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!


ஹட்டன் காவற்துறை பிரிவுக்குட்பட்ட ஸ்ட்ரதன் தோட்டம் சித்தரவத்த பிரிவில் இன்று (5) பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக ஹட்டன் காவல் நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 60 வயது மதிக்கத்தகவர் என்றும் அவரைப் பற்றிய மேலதிக விபரங்கள் கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என உறுதிப்படுத்துவதற்காக ஹட்டன் காவல் நிலையத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Powered by Blogger.