ஜப்பானிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கைத்துப்பாக்கி : சந்தேகத்தில் ஒருவர் கைது!!!

ஜப்பானிலிருந்து விளையாட்டு பொருட்கள் என குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கைத்துப்பாக்கி
ஒன்று மீட்கப்பட்டுள்ளது.. இது தொடர்பில் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை 23 ஆம் திகதி செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொழும்பு தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றுக்கு நேற்று (19) ஜப்பானிலிருந்து விளையாட்டு பொருட்கள் எனக் குறிப்பிட்டு பொதி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. சுங்கப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற குறித்த பொதியை சோதனைச் செய்யதபோது அதிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்றும் அதன் ஆறு தோட்டாக்களும் மேலும் இரு விளையாட்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பொதி இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெமட்டகொட பொலிஸாரால் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

