தீவிரவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டு இருவர் கைது!!!!

மாவனெல்ல பகுதியில் வைத்து தீவிரவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கடந்த டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை காத்தான்குடி பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு போலீசில் விளக்கமறியலில் வைக்கபட்டு உள்ளார். இதனை அடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இவரை விசாரிக்க நீதிமன்றில் அனுமதி பெற்று விசாரிக்க அனுமதி பெற்றுள்ளனர்.
குறிப்பிட்ட நபர் சாய்ந்தமருது தாக்குதலில் சம்பந்தப்பட்ட ரிஸ்வானுடன் தொடர்புகளை மேற்கொண்டவர் எனவும் இவர் காத்தான்குடி பிரதேசத்தில் அடிப்படைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார்.