Header Ads

Breaking News
recent

ரமழான் வசந்தம் நாளும் ஒரு கேள்வி இல 04

ரமழான் வசந்தம் நாளும் ஒரு கேள்வி

கேள்வி இல :- 04


MAX TAMIL MEDIA (PVT) LTD ஊடகஅனுசரனையில் நாடளாவிய ரீதியில் இஸ்லாமிய மார்க்கவிடயங்களில் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ரமழான் மாதத்தில் 20 நாட்களுக்கு தினமும் ஒரு வினா வீதம் கேட்கப்படும். சரியான பதில் அளிப்பவர்களில் இருந்து வெற்றியாளர் இருவர் தெரிவு செய்யப்படுவார்.

தெரிவு செய்யப்படும்
🔻 முதல் வெற்றியாளருக்கு 1000 ரூபா பணப்பரிசிலும்

🔻இரண்டாவது வெற்றியாளருக்கு 500 ரூபா பணப்பரிசிலும் வழங்கப்படும்.

🔻போட்டியில் கலந்து கொள்ளும் 100 பேருக்கு சான்றிதழ் வழங்கப்படும்

வயது வேறுபாடு இன்றி உலகின் எப்பகுதியில் இருந்தும் இந்த போட்டியில் கலந்துகொள்ளலாம்.

போட்டி பற்றிய விபரம்

இந்த ரமழான் மாதத்தில் 20 நாட்களும் 20 MaX தமிழ் முகநூல் பக்கத்தில் கேள்விகள் பிரசுரிக்கப்படும்.

அனைத்து கேள்விகளும் இஸ்லாமிய மார்க்க விடயங்களில் தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்திருக்கும்.

தினமும் ஸகர் வேளையில் கேட்கப்படும் கேள்விக்குறிய விடையை அதே தினத்தில் இரவு 10 மணிக்கு முன்னர் பெயர் முகவரியுடன் கேள்வி இலக்கத்தை மாத்திரம் குறிப்பிட்டு +94754889999 என்ற WHATSAPP இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.

போட்டியின் நிபந்தனைகள்

மார்க்க விடயங்களில் தெளிவை ஏற்படுத்துவதே இப்போட்டியின் முதன்மை நோக்கமாகும்.

வயது வேறுபாடு இன்றி யாரும் கலந்துகொள்ளலாம்.

ஒருவர் பல இலக்கங்களில் பதில் அனுப்புதல் போன்ற மோசடிகளில் இருந்து தவிர்ந்து கொள்ளவோம். மோசடி இஸ்லாத்தில் ஹராமாகும்..

ஒருவர் ஒரு கேள்விக்கு ஒரு தடவை மாத்திரமே பதில் அனுப்பமுடியும்.

குறித்த நாளில் ஒரு தடவைக்கு மேல் பதில் அனுப்பும் வாசகர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
Powered by Blogger.