Header Ads

Breaking News
recent

இரு சிறுவர்கள் பரிதாப மரணம்


திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்திற்கு குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வனர்த்தம் இன்று (18) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவர்கள் முள்ளிப்பொத்தானை - ஈச்சநகர் பகுதியைச் சேர்ந்த சுஹைல் சக்தி (13 வயது) மற்றும் முள்ளிப்பொத்தானை- 95 யைச் சேர்ந்த அலிப்தீன் அஸ்கார் (13 வயது) எனவும் தெரிய வருகின்றது.


நோன்பு பிடித்துக் கொண்டு சிறுவர்கள் சிலர் சேர்ந்து தம்பலகாமம்- முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில் உள்ள பரவிப்பாஞ்சான் என்ற குளத்துக்கு குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கியுள்ளனர்.

பின்னர் சிறுவர்கள் மீட்கப்பட்டு கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்த சிறுவர்களின் சடலம் தற்பொழுது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.