கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற ஏறாவூரில் எடுக்கப்பட்ட 14 தீர்மானங்கள்.
தற்போது நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல்
அச்சம் காரணமாகவும் எமது பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள டெங்குவின் தாக்கத்தில் இருந்தும் ஏறாவூர் பிரதேச மக்களை பாதுகாக்கும் நோக்குடன் எவ்வாறான சட்ட நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பில் ஏறாவூர் நகர சபையின் கௌரவ தவிசாளர் MS.நழீம் ஹாஜி, மற்றும் பிரதேச செயலாளர் ,சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் தலைமையில்
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட உள்ளூர் திணைக்களத் தலைவர்கள், சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும்
சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 25.4..2021 இன்று காலை ஏறாவூர் பிரதேச செயலக மண்டபத்தில் கொரோனா தடுப்பு செயலணியின் கலந்துரையாடல் இடம் பெற்றது.
குறித்த கந்துரையாடலில் நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் அச்சம் காரணமாக
பொதுமக்களின் பாதுகாப்புக்கருதி பின்வரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு எமது பிரதேசத்தில் அதிவேகமாக பரவிவரும் டெங்கு ஆட்கொல்லி நோயில் இருந்து எமது பிரதேச மக்களை பாதுகாத்துக்கொள்ள பின்வரும் நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுவது தொடர்பாக. பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது...
1.சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைவாக ஒவ்வொரு தனிநபரும் சுகாதார
நடைமுறைகளைப் பின்பற்றுவதோடு ,மாஸ்க் அணிதல் சமூக இடைவெளிகளை கடைபிடித்தல் போன்ற இருக்கமான நடைமுறைகளை பின்பற்றுதல்....
2..வர்த்தக நிலையங்கள் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுதல்.
பிரதான வீதி உட்பட சகல வர்த்தக நிலையங்களும் கைகழுவுதல் ,முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதோடு
கைகழுவுவதற்கான வசதிகள் அல்லது தொற்று நீக்கி கொண்டு கைகளை
சுத்தப்படுத்துவதற்கான வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தல்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு பொருட்களை விற்பதையோ, உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதையோ தவிர்த்து கொள்ளுதல்.
3...தனியார் கல்வி நிலையங்கள், தனியார் வகுப்புக்கள் ,வீடுகளில் நடத்தப்படும் மேலதிக நேர வகுப்புக்கள், அனைத்தும் எதிர்வரும் 31.05.2021 வரை தற்காலிகமாக மூடுதல்.
4..பள்ளிவாயல்களில் ஒரே நேரத்தில் ஒன்றுகூடக்கூடியவர்களின் அதிக பட்ச எண்ணிக்கை 50
பள்ளிவாயலுக்கு வருகை தருவோர் வீடுகளில் இருந்தே வுழூ செய்து வருவதோடு
முழு நேரமும் முகக்கவசம், தொழுகை விரிப்பு கொண்டுவருவது கட்டாயம்.
அத்துடன் பள்ளிவாயல்களின் முன்பாக சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான சட்ட நடைமுறைகள் அடாங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தல்
5..பொது இடங்கள், பொதுச்சந்தை, வர்த்தக நிலையங்கள் போன்ற வற்றை மேர்பார்வை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதோடு,தேவை ஏற்படும் போது PCR பரிசோதனைகளும் எடுக்கப்படும்
6..தேவையற்ற ஒன்றுகூடல்கள், பிரயாணங்கள், களியாட்ட நிகழ்வுகள் என்பவற்றினை முற்றாக தவிர்த்தல்.
7.மரண வீடுகள், திருமண நிகழ்வுகள் போன்ற தவிர்க்க முடியாத ஒன்றுகூடல்களின்
போது சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் அறிவுறுத்தல்களைப் பெற்று
குறைந்தளவு பொதுமக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளுதல்.
8. சந்தைகள், கடைகள், பிரதான பாதை என்பவற்றில் ஏற்படும் சனநெரிசலைக் குறைக்கும்வகையிலும், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை தவிர்க்கும்
வகையிலும் நடமாடும் வியாபாரிகளின் ஊடாக தேவையான பொருட்களை கொள்வனவு
செய்தல்.
9. உணவகங்களில் இருந்து உண்ணாது உணவுப் பொருட்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக பரிமாறுதல்,
11.சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைவாக முகக் கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக பொலிஸாரினால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
12.சலூன்கடை உரிமையாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு சிகை அலங்கார நிலையங்களில் காத்திருப்பு வடிக்கையாளர்களை தடைசெய்தல்.
13. எமது பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால் பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் அதனை அண்டி உள்ள சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு வேண்டிக் கொள்வதோடு இதுதொடர்பில் கவன ஈனமாக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல்.
14. மேற்குறிப்பிடப்பட்ட நடைமுறைகளை மீறுவொருக்கெதிராக சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளுதல்
எனவே இவ்விடயங்களில் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவதோடு மிகவும் அவதானிப்புடன் நடந்து கொண்டு
தனிநபர்களினதும், சமூகத்தினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்
கட்டாயமாக்கப்படுகின்றது.
கொரோனா தடுப்புச் செயலணி
ஏறாவூர்.
