Header Ads

Breaking News
recent

வெலிகட சிறைச்சாலை ஹொரணைக்கு மாற்றம்



எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் வெலிகட சிறைச்சாலையை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதி புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே தெரிவிக்கின்றார்.

2024ம் ஆண்டில் வெலிகட சிறைச்சாலையை ஹொரணை பகுதிக்கு கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலும், இதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.