Header Ads

Breaking News
recent

கிண்ணியாவில் நிரந்தர நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி!!!


(கிண்ணியா நிருபர் - முனீஸ்)
கிண்ணியாவில் நிரந்தர நீதிமன்றம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் அடுத்து ஒரு கட்டம் கை கூடியுள்ளது.

இலங்கை முழுவதும் நீதிமன்ற அதிகரிப்புக்கான நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு கிண்ணியா ஷூரா சபை ஒரு அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்திருந்தது.

அதேபோன்று திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் இதற்கு சார்பான அறிக்கையினை அனுப்பியிருந்தது.

மேலும் நீதி அமைச்சுக்கு திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தினர் அழைக்கப்பட்டு இதற்கான விளக்கத்தினையும் தெளிவையும் பெற்றுக் கொண்டார்கள் .

இந்த குழுவின் அறிக்கையானது நீதி அமைதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதில் கிண்ணியா பிரதேசத்தில் குற்றவியல் மற்றும் குடியியல் வழக்குகளை விசாரிக்க கூடிய இணைந்த நீதிமன்றம் ஒன்றை புதிதாக உருவாக்குவதற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வானாறு பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளையும் இணைத்து இந்த நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என்றும் மேலும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நிரந்தரமாக நீதிமன்றம் அமைப்பதற்கான இடம் அடையாளப்படுத்தப்பட்டு கட்டிடம் அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.