Header Ads

Breaking News
recent

நாட்டில் மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!



நாட்டில் மேலும் ஆயிரத்து 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 30ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் மேலும் 362 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 95ஆயிரத்து 445ஆகப் பதிவாகியுள்ளது.

அத்துடன், கொரோனாவால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 661ஆக உள்ள நிலையில், இன்னும் ஒன்பதாயிரத்து 924 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
Powered by Blogger.