Header Ads

Breaking News
recent

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் இன்று 03 பேர் மரணம்!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 15.05.2021 ஆந் திகதி சனிக்கிழமை இருபது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று 03 கொரோனா நோயாளர்கள் மரணமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் ஓட்டமாவடி சுகாதர வைத்திய அதிகாரி பிரிவில் பதினைந்து 15 பேரும், ஆரையம்பதி சுகாதர வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு பேரும் 02, காத்தான்குடி சுகாதர வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு பேரும், செங்கலடி சுகாதர வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமாக இருபது பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதே வேளை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு சுகாதார பிரிவில் இரண்டு பேரும் காத்தான்குடியில் ஒருவருமாக மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்
Powered by Blogger.