இலங்கையில் மேலும் 1,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு.

இலங்கையில் மேலும் 1,581 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 127,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,148 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும்
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 801 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.