Header Ads

Breaking News
recent

இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 05 மாவட்டங்களை சேர்ந்த மேலும் 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை முதல் விடுவிப்பு



இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 05 மாவட்டங்களை சேர்ந்த மேலும் 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, கம்பஹா மாவட்டம், திவுலபிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அஸ்வென்னவத்த கிழக்கு 104 கிராம உத்தியோகத்தர் பிரிவுகொட

தெணியாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹிரலு கெதர 79 பீ கிராம உத்தியோகத்தர் பிரிவு

அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, கதிரபுர 142 N கிராம உத்தியோகத்தர் பிரிவு, தெஹியத்தகண்டிய சந்தன கிராம உத்தியோகத்தர் பிரிவு, தெஹியத்தகண்டிய தொலகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் குருணாகலை மாவட்டம் கும்புக்கெடே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தித்தவெல்கால 442 கிராம உத்தியோகத்தர் பிரிவு

நிராவிய 441 கிராம உத்தியோகத்தர் பிரிவு

உப்புவேலி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அன்புவழிபுரம் 243C கிராம உத்தியோகத்தர் பிரிவு

திருகோணமலை மாவட்டம் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உவர்மலை 244P கிராம உத்தியோகத்தர் பிரிவு, மட்கோ 244M கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் லிங்க நகர் 244R கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சீன துறைமுகம் – லங்கா பாலம் மற்றும் தானயகம 1 கிராம உத்தியோகத்தர் பிரிவு

காவட்டிகுடா – சமன்புர, மீன்பிடி கிராமம் மற்றும் தானயகம 2 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும்

களுத்துறை மாவட்டம் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாரம்பிடிய 696ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்ட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.