Header Ads

Breaking News
recent

இலங்கையில் மிகப் பெரிய கொவிட் 19 வைத்தியசாலை!!!


இலங்கையில் மிகப் பெரிய கொவிட் 19 வைத்தியசாலையொன்று கட்டப்பட்டுள்ளது.

குறித்த வைத்திசாலையை இலங்கை இராணுவத்தினர் கம்பஹா மாவட்டம் சீதுவ நகரில் நிறுவியுள்ளதுடன் இன்று பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதுடன் மரணங்களும் அதிகரிக்கின்றது.இந்நிலையில், இலங்கை இராணுவத்தினர் இவ்வாறு ஒரு பெரிய கொவிட் 19 வைத்தியசாலை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுமார் 2500 படுக்கைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 4 நாட்களில் மேலும் 5000 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



Powered by Blogger.