Header Ads

Breaking News
recent

மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்

(ஹொரோவப்பொத்தானை - நசீம்)
திருகோணமலை ஹொரோவப்பொத்தானை பிரதான வீதி ரத்மலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து இன்று மாலை 06:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹொரோவப்பொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதியதில் கோமரங்கடவல பகுதியைச் சேர்த்த நபர் ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த பகுதியில் அண்மைக்காலமாக காட்டகாலியாக திரியும் மாடுகளின் நடமாட்டங்கள் அதிகரித்து காணப்படுவதோடு மேலும் பல விபத்துச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.




Powered by Blogger.