Header Ads

Breaking News
recent

நாட்டில் இன்றுமட்டும் 2,289 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!



நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 289 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில், 20 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 38ஆயிரத்து 85ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 306 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 108 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 923ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 27ஆயிரத்து 54 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 11 இலட்சத்து 54 ஆயிரத்து 795 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை இரண்டு இலட்சத்து 43 ஆயிரத்து 957பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.