மே 31 மற்றும் ஜூன் 4 ஆம் திகதிகளில் பயணத்தடையில் தளர்வில்லை..!

தொடர் முடக்கத்திற்கு அரசாங்கம் செல்கிறது என தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜூம் 07 ம் திகதிவரை பயணக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தில் இடையில் இரண்டு நாட்கள் தளர்வை அனுமதித்துள்ள அரசு அந்த இரண்டு நாட்களிலும் முழு கட்டுப்பாட்டை விதிக்க அரசு தீர்மானித்துள்ளதாக அரச உயர் மட்டத் தகவல்கல் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நேற்று முன் தினம் 25 ம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்த்ப்பட்ட போது மக்கள் பொறுப்பின்றி நடந்து கொண்டதால் இம்மாதம் 31 மற்றும் ஜூன் 04 ம் திகதிகளில் தளர்த்தாமல் தொடராக 07 ம் திகதிவரை தொடர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும் இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் அனுமதித்து எல்லா இடங்களிலும் மக்களின் வீடுகளுக்கு அருகாமையில் சென்று பொருட்களை விற்பனை செய்யும் வகையிலும் நடமாடும் விற்பனை வாகனங்களுக்கு அனுமதியளிக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.
அதேவேளை மருந்துப் பொருட்கள் பெறுதல், வைத்தியசாலைகளுக்குச் செல்லுதல் என்பனவும் இக்காலத்தில் அனுமதிக்கப்படவுள்ளன.
இது தொடர்பான அரசின் உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளை வெளியாகும் என மேலும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.