கிண்ணியா உலமா சபையின் அனர்த்த நீதியத்திற்கு கிடைக்கப்பெற்ற மொத்த நிதி 5150000 ரூபா...
கிண்ணியா உலமா சபையினால் உருவாக்கப்பட்ட கிண்ணியா அனர்த்த நிதியத்திற்கு 30.05. 2021 இதுவரைக்கும் பணமாகவும் பொருளாகவும் 5,150,000/= கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர்களது உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளனர்.குறித்த நிதியிலிருந்து 1300 குடும்பங்களுக்கு ரூபா 2500 பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக
3,250,000/= செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதே போன்று ஏனைய செலவுகளாக
ஜனாஸா வாகனம், ஜனாஸா பெட்டிகள், பாதுகாப்பு அங்கிகள், ஜனாஸாக்களை கையாளுகின்ற ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் போன்ற செலவுகளாக 298,500/= ரூபா செலவு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த செலவுகள் தொடர்பிலான மேலதிக விபரங்களை பெற விரும்புவோர் குட்டித்தீவில் அமைந்துள்ள கிண்ணியா உலமா சபையின் காரியாலயத்தை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்
கிண்ணியா அனர்த்த நிதியத்திற்கு நிதிகளை வழங்க விரும்புபவர்கள் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு வழங்கலாம்.

